ஆண்டாளின் பிள்ளைகளாகிய தேவேந்திரர்கள்
#ஸ்ரீவில்லிபுத்தூர்ஆண்டாள்கோயில் தேரோட்டம்
#தேவேந்திரகுலவேளாளர்பெருமைகள்!
பெருமாள் சேரி,கரிசல்குளம்- ஸ்ரீ ஆண்டாள் கோயிலுக்கும் உள்ள உறவு;
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் உள்ள உறவைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூர் கோயில் ராஜா கோபுரத்தில் “நெல், கரும்பு,வாழை போன்றவற்றை பூமிக்குக் கொண்டு வந்து பயிர் செய்தவர் “தேவேந்திரன்” என்று ஆண்டாள் கோவில் கல்வெட்டு சொல்கிறது. ஆண்டாள் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட அதன் அருகில் உள்ள நிலங்கள், ஊர்களைக் குறிப்பிடும் பொழுது தேவேந்திரி கிராமம் என்ற பதிவே முதலில் வருகிறது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள இரண்டு குளத்தைத் தேவேந்திரகுல வேளாளர்களே பராமரிக்கின்றனர். ஆண்டாள் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட நிலத்தையும் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களே உழவு பணி செய்கிறார்கள்.
பெருமாள்சேரி அருகில் உள்ள வடமலைக்குறிச்சி கம்மாய் பராமரிப்பை தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 1.பெருமாள் வகையறா 2.வேங்கடையான் வகையறா 3.விலங்குடையான் வகையறா 4.கருப்பன் வகையறா 5.வள்ளாகுடி சாமி கும்பிடும் நான்கு வகையறாக்கள் உழவுப் பணி பார்க்கிறார்கள். 999 ஏக்கர் பெரியகுளம் கம்மாய் பாசன பகுதியை கரிசல்குளம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பார்க்கிறார்கள்.
அந்தக் காலத்தில் தார் சாலை கிடையாது. ஆண்டாள் கோயில் தேர் மிக உயரமானது. இடது பக்கம் நான்கு சக்கரம் வலது பக்கம் நான்கு சக்கரம் இருக்கும்.தேர்ச்சக்கரம் பூமியில் பதிந்து கொள்ளும். பள்ளத்தில் மண்ணைப் போட்டுத் தேரை நகர்த்தி நிலைக்குக் கொண்டு வரவேண்டும். இப்ப தேருக்கு இரும்புச் சக்கரம் போட்டு உள்ளார்கள். தார்ச்சாலை போட்டு இருக்காங்க, அதனால தேர் வேகமாக நிலைக்கு வந்து விடுகிறது. அந்தக் காலத்தில் பெருமாள்சேரி, கரிசல்குளம் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடு தவறாமல் கோயிலுக்கு உள்ளே சென்று தேரடி மொட்டையாண்டி சாமியை கும்பிட்டு வரிபடி இரண்டு கிராமத்திலிருந்து வந்து விட்டார்களா என்று பார்ப்பார்கள். அப்படி வரவில்லையென்றால் அபராதம் உண்டு. தேர் புறப்பட்டு நிலைக்கு வர இரண்டு மாதங்கள் கூட ஆகும்.அது வரை தேரடியிலேயே இருப்பார்கள். பெருமாள்சேரி, கரிசல்குளம் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் போகவில்லையென்றால் தேரோட்டமே நடத்த முடியாது. அந்தக் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தினர் இம்மக்களை அழைத்துச் செல்ல ஊரில் வந்து காத்துக்கிடப்பதும் உண்டு.
இங்கு உள்ள வடமலக்குறிச்சி கம்மாய் மடைபணி பார்த்த ஒருவர் இறந்துவிடுகிறார். இந்த தகவலை கோயில் நிர்வாகத்திடம் போய்ச் சொல்கிறார்கள். கோயில் நிர்வாகம் இறந்தவருக்கு மரியாதை செய்ய, ஸ்ரீ ரங்கமன்னார் உடுத்திய வேட்டி, மாலை, வாய்கரிசி, கங்கு(தீ) கொடுத்து அனுப்பி உள்ளார்கள். இந்த நடை முறை கரிசல்குளம்,பெருமள் சேரி ஆகிய இரண்டு ஊர்களில் உள்ள ஆண், பெண் யார் இறந்தாலும் ஸ்ரீ ரங்கமன்னார் வேட்டி, ஆண்டாள் புடவை கோயில் நிர்வாகத்தினர் கொடுப்பது வழக்கம். இந்த நடை முறை வேறு சமுதாயத்துக்கு கிடையாது.
ஆண்டாள் கோயிலில் பங்குனி மாதம் ஏர்பூட்டும் திருவிழா நடக்கும். அப்பொழுது இரண்டு ஊரைச் சேர்ந்தவர்கள் கலப்பையுடன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வார்கள். அதே போல், சொக்கப்பனை கொழுத்தும் பொழுது முதல் நாள், சிவன் கோயிலுக்கு சென்று கலந்து கொள்வார்கள். இரண்டாம் நாள் ஆண்டாள் கோயிலில் நடக்கும் சொக்கப்பனை கொழுத்தும் விழாவிற்குத் தேவையான பொருட்களைச் சேகரித்து கொடுப்பதை இரண்டு கிராமத் தேவேந்திரகுல வேளாளர்கள் பொறுப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம்;
27-07-2017 அன்று காலை 9.00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. பெருமாள்சேரி, கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் தேருக்கு தடி போட்டு தேரோட்டத்தை தொடக்குவது வழக்கம். அந்த நடைமுறைபடி, பெருமாள் சேரி பூசாரி வனமூர்த்தி ஊர்நாட்டாமை இசக்கிராஜா, கணக்கு பிள்ளை பிச்சை, ஊர்தலைவர் பழனிச்சாமி, செயலாளர் முத்துராஜ், பொருளாளர் பி.வீராச்சாமி ஆகியோர் முன்னிலையில் ஊர்மக்கள் கொட்டுமேளத்துடன் தேருக்கு பின்புறம் வந்து சேர்ந்தார்கள். பூசாரி வனமூர்த்தி தேர் சக்கரத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்தார். அதன் பிறகு தேங்காய் உடைத்து சூடம் காட்டிய பிறகு சேவல் பலி கொடுத்து தேர் சக்கரத்துக்கு ரத்த காவு கொடுத்தார்கள். அதே போல, பின்புறம் உள்ள மறு சக்கரத்திற்கு பூசாரி மாசாணன், ஊர் நாட்டாமை கரியப்பா ஆகியோர் முன்னிலையில் ஊர்மக்கள் வருகை தந்து தேர் சக்கரத்திற்கு சேவல் அறுத்து “ரத்த காவு” கொடுத்தார்கள். இந்தப் பணி நிறைவு பெற்ற பிறகு தேரோட்டம் தொடங்கியது.
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேர் எப்பொழுது உருவாக்கப்பட்டதோ அன்று தொடங்கி இன்று வரை பெருமாள்சேரி,கரிசல்குளம் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் தேருக்கு தடி போட்டு தொடங்கும் வழக்கம் இன்று வரை நடந்து வருகிறது. இன்று இரும்பு சக்கரம் மாற்றப்பட்டு, JCP வைத்து தள்ளும் நிலை ஏற்பட்டாலும் இம்மக்களுக்கு எப்பொழுதும் கொடுக்கும் மரியாதையை ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் கொடுத்து வருகிறது.
#தேவேந்திரன் வழிவந்ததால் பாண்டியர்கள் தேவேந்திரன் ஆரத்தைபூண்டதாகவும் #இந்திரனின் ஆசனத்தில் அமர்ந்ததாகவும் வரலாறுகூறுகிறது.
தேவேந்திரன் வழிவந்தவனே #பாண்டியன்.
தேவேந்திரகுலமென்றாலே பாண்டியர்குலம்தான்.
பாண்டியகுல அரசியே #ஆண்டாள்.
தேவேந்திரகுல ஆண்டாளை இழிவுபடுத்தினால் ஆண்டாளின் பிள்ளைகளாகிய தேவேந்திரர்கள் பொருத்துக்கொள்ளமுடியாது.
#விஸ்கர்மா ஆசாரி இனைத்தைச் சார்ந்த #வைரமுத்துவை தேவேந்திரகுல மக்கள் வண்மையாக கண்டிக்க வேண்டும்.
Comments
Post a Comment