மூத்த தமிழ்குடி - வேளாண்குடியின் அடையாளம் திராவிடத்தால் மூடி மறைக்கப்படும் போது, தமிழ் அடையாளம் எப்படி உயிர் பெறும்!!
SC பட்டியலை விட்டொழிப்போம்!
தேவேந்திரகுல வேளாளர் அடையாளத்தை மீட்டெடுப்போம்!!
அக்டோபர் - 6
சென்னை பேரணி! மாநாடு!!
எழுந்திடு தேவேந்திரா!!
எற் நெஞ்சமெல்லாம் நிறைந்த தேவேந்திரகுல தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், ஊர் நாட்டாண்மை, பட்டக்காரர் மற்றும் பெரியோர்களுக்கும், இளைஞரணி நண்பர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் மற்றும் "தேவேந்திரகுல வேளாளர் அடையாள மீட்பு" இயக்கத்தில் கரம் கோர்த்து நிற்கும் அனைத்து அமைப்பின் முன்னணிச் சகோதரர்களுக்கும் வணக்கம்!!
சென்னைப் பேரணிக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் கடிதத்தின் வாயிலாக உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்!!
தமிழ் மண்ணோடும் தமிழ் மொழியோடும் இரண்டற கலந்த மக்கள் - தேவேந்திரகுல வேளாளர்கள்!!
தமிழ் இலக்கியங்களுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியத்தில் "மருதநில மக்களாக" அடையாளப்படுத்தப்பட்ட பெருமைக்குரிய வேளாண்குடி மக்களே நாம்!!
எவருக்கும் அடிமையாகாமல், எவரையும் அடிமைப்படுத்தாமல் சுதந்திரமாக சொந்த மண்ணில் கோலோச்சிய சமூகம், பின்னாளில் பல படையெடுப்புகளுக்கு ஆளாகி, நிலங்களை இழந்து, அதே நிலங்களில் உரிமையிழந்து வாழும் நிலைக்குத் தள்ளப்படோம்!!
நிலம் இழந்தபின் சமூக ஒடுக்குமுறைகளும் வந்தன! வறுமை குடிபுகுந்தது!!
நமக்கேற்பட்ட வறுமை, சமூக ஒடுக்குமுறைகளுக்கு வரலாற்று ரீதீயான பின்னணிகளை ஆய்வுசெய்து முறையான தீர்வு காணாமல் நம்மை அரிஜன்/ ஆதிதிராவிடர்/ பட்டியலினம் என்ற பட்டியலில் தள்ளிவிட்டனர்!!
தமிழகத்தைச் சார்ந்த வேறொரு சமுதாயம் பஞ்சமர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என போராடியதைப் போல நாமும் போராடியிருந்தால் ஒடுக்குமுறைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டு இருக்காது.
1957-முதுகுளத்தூர்
1968-கீழவெண்மணி
1979-உஞ்சனை
1980-இராமநாதபுரம்
1981-அய்யாபுரம்
1982-மீனாட்சிபுரம் மதமாற்றம்
1989-போடி மீனாட்சிபுரம் சம்பவங்களில்
உடைமை இழந்தோம்! உயிர் இழந்தோம்!!
கண்ணீர் வடித்தோம்!
கலங்கினோம்!!
எவரும் கைகொடுக்க முன்வரவில்லை! தேசியமும் திராவிடமும் ஏமாற்றின!!
1995 கொடியங்குளம் நிகழ்விற்குப் பிறகு
புதிய தமிழகத்தைக் கண்டோம்! வரலாற்றைத் திருப்பினோம்!!
அழிக்கப்பட்ட அடையாளத்தை மீட்க தேவேந்திரர்கள் வீறுகொண்டு எழுந்தோம்!
தங்கள் உயிருக்கும், மானத்திற்கும், உடைமைக்கும் நாமே பாதுகாப்பைத் தேடிக் கொண்டோம்!
தேவேந்திரர் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோம்!
காலப்போக்கில் பல பட்டங்கள் பெற்றோம்! சிலர் பதவிகளையும் பெற்றனர்!!
எத்தனை பட்டங்கள், பதவிகள் பெற்றாலும் பட்டியல் பட்டம் மறைய மறுக்கிறது!!
பட்டியலுக்குள் அடைக்கப்பட்டதால் நம் சமூகம் கண்ட பலன் என்ன?
தொழில்துறையில், வணிகத்தில், பிற துறைகளில் முன்னேற முடிகிறதா?
சங்க இலக்கியங்களிலே போற்றப்பட்ட பள்ளர் (மள்ளர்), குடும்பர், காலாடி, மூப்பன், பண்ணாடி, வாதிரியார் என பல பெயர்களில் அழைக்கப்பட்ட தேவேந்திரகுல வேளாளர் எனும் பெருமைமிகு அழிக்கப்பட்டது தானே மிச்சம்!!
பட்டியலில் அடைத்து வழங்கப்பட்ட சில சலுகைகளையும், வேறு வேறு வகைகளில் பறித்துக் கொண்டார்கள்!
எந்தப் பலனும் இல்லாமல் பட்டியல் என்ற இழிவை மட்டுமே தாங்கிக் கொண்டு வாழ்வதால் என்ன பலன்?
உலகில் நடைபெற்ற அனைத்துப் போராட்டங்களும் புரட்சிகளும் நாடு அல்லது இனம்/மொழி/வர்க்க ரீதியான அடையாளங்களை மீட்டெடுப்பதற்கே நடைபெற்றுள்ளன!!
திராவிடத்தின் பெயரால் நம்முடைய அடையாளம் மூடி மறைக்கப்பட்டது!!
மூத்த தமிழ்குடி - வேளாண்குடியின் அடையாளம் திராவிடத்தால் மூடி மறைக்கப்படும் போது, தமிழ் அடையாளம் எப்படி உயிர் பெறும்!!
தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாள மீட்பே தமிழர் அடையாள மீட்பு!
தேவேந்திரர்கள் எழுச்சியே தமிழர் எழுச்சி!!
தேவேந்திரர்கள் ஆட்சியே தமிழர் ஆட்சி!!
பட்டியலை விட்டு வெளியேறுவோம்!
தேவேந்திரகுல வேளாளர் அடையாளம் மீட்போம்!!
ஒருவராக அல்ல! இருவராக அல்ல!
ஒரு குடும்பமாக அல்ல! ஒரு தெருவாக அல்ல!
ஊரே திரண்டு வருக!! நாடே திரண்டு வருக!!
தேவேந்திர இனமே திரண்டு வருக!!
அக்டோபர் 6-ல் சென்னையில் சந்திப்போம்!
Comments
Post a Comment