பட்டியலில் உள்ள சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா? இழிவு போய் விடுமா ? கம்யூனிஸ்ட் தலித்திய கட்சியினருக்கு பதில்

பட்டியலில் உள்ள சாதிகளிலிருந்து விலகினால் மதிப்பு, மரியாதை வந்து விடுமா?  இழிவு போய் விடுமா ?  கம்யூனிஸ்ட் தலித்திய கட்சியினருக்கு பதில்


பட்டியல் சாதிகளில் (SC)  சேர்க்கப்படுவதற்க்கு  முன் தேவேந்திர மள்ளர்களுக்கு மதிப்பு மரியாதையும்  இருக்கத்தானே செய்தது. ஆசாரி, பூசாரிஉஉள்ளிட்ட பல சாதியினரும்,  பல்வேறு சாதிகளைச் சார்ந்த களத்து வேலை செய்தவர்களும், காவல் வேலை செய்தவர்களும் மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டு விட்டுத்தானே வேலை செய்தார்கள். அந்த நிலை எப்போது மாறியது?

பட்டியல் சாதிகளில் மள்ளர்கள் சேர்க்கப்பட்டபோதுதானே!  " சர்க்காரே பள்ளர்களை கீழ்ச்சாதி என்று சொல்லிவிட்டது " எனக்கூறி மள்ளர்களின் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டு  வேலை செய்து வந்த. சாதிகளெல்லாம் மள்ளர்களை விட்டு விலகிச் சென்றனர்.

இது தானே 1935 - இல் நடந்தது. அப்படியானால்  அந்த பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறும் போது தேவேந்திர மள்ளர்களுக்கு மீண்டும் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெருவதில் என்ன தடை இருக்க முடியும்.

அதில் என்ன சந்தேகம் ?

#தேவேந்திரமள்ளர்களின் சுயத்தை அழித்து தேவேந்திர மள்ளர்களை அரிசனனாக, ஆதி திராவிடனாக, தாழ்த்தப்பட்டவனாக, தலித்தாக காட்டி வருவது பட்டியல் சாதிகள் (SC) என்னும் ஆளவந்தார்களின் புதிய வர்ணாசிரமம் கோட்பாடாகும்.

ஆக பட்டியல் சாதிகளிலிருந்து  வெளியேறும்போதுதான்  தேவேந்திர மள்ளர்கள் தங்களின் அடையாளத்தைப் பெற முடியும். #சுயஅடையாளத்தை பெற்றால்தான் #சுயமரியாதையையும், #சுயஆட்சியையும் பெற முடியும்.

முன்னேற்றம் என்பது ஒரு சிலர் அரசு வேலைக்குச் செல்வதல்ல. எத்தனையோ  வேறு பல அம்சங்கள் உள்ளன. அந்த முன்னேற்றங்களுக்கெல்லாம் தடையாயிருப்பது இந்தப் #பட்டியல்சாதிஅடையாளம் தான்.

ஆகவே, பட்டியல் சாதிகளிலிருந்து வெளியேறினால் உறுதியாக முன்னேற முடியும்.

#அக்டோபர்6
#அடையாளமீட்புபோர் மற்றும் #பட்டியல்வெளியேற்றம்

#ISupportDrKrishnasamy
#புதியதமிழகம்.

Comments

Popular posts from this blog

எந்த சாதியையும் விரோதியாக பார்ப்பதில்லை

தேவேந்திரகுல வேளாளர் வரலாறு