திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், மள்ளர் குலத்தாரின் உரிமையும்...
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும், மள்ளர் குலத்தாரின் உரிமையும்... சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களும் இவ்விடத்தில் கூடிக் கோலோச்சியுள்ளனர் .
'மலையின் அடிவாரத்தே வளமான வயல்கள் உள்ளன. நீர் நிறைந்த பொய்கை உள்ளது. சுனைகளில் பல மலர்கள் நிறைந்துள்ளன' என்பன போன்ற மருத நில மாட்சிகளைக் காட்சிப் படுத்துகிறார் நக்கீரர்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க முற்காலப் பாண்டியர் காலத்தில் குடைவரைக் கோயிலாகத் தோற்றம் பெற்ற திருப்பரங்குன்றம் கோயில்,
பிற்கால பாண்டியர் காலத்தில் சிறந்து விளங்கியது. பாண்டியராட்சி முடிவுற்று வடுகராட்சி நிலவி வந்த காலகட்டங்களில் இக்கோயிலில் பாண்டிய மரபினரான பள்ளர்களுக்கு இருந்து வந்த பல்வேறு உரிமைகளும் மறுக்கப் பட்டன.
இதன் எச்சமாகப் பள்ளர் குலத்தார்க்குப் பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செய்யும் முறை இக்கோயிலில் இப்போதும் நடைபெற்று வருவதென்பது கண்கூடு.
இந்த உண்மை வரலாறு ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் போது தற்போதைய கோயில் நிருவாகத்தினரால், பாண்டிய மண்ணை ஆண்ட மரபினரான பள்ளர் குலத்தார்க்கு 'பரிவட்டம்' கட்டி முதல் மரியாதை செய்யும் முறையிலிருந்து உலகத்தார்க்கு உணர்த்தப்பட்டு வருகிறது.
முருகன் தெய்வானை திருமண விழா நடைபெற்ற பின்னர் இப்பரிவட்டம் கட்டும் விழா நடைபெறுகிறது.
தெய்வானை தேவேந்திரனின் மகள் என்பதால் முருகன் தெய்வானை திருமணம் முடிந்த பின் 'மறு வீட்டிற்கு அழைத்தல்' விழாவானது திருப்பரங்குன்றத்தில் உள்ள 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு' அழைத்து வந்து விழா நடத்தப் படுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவானது ஆண்ட மரபினரின் அடிச்சுவட்டினை அறிய உதவுகிறது. (நேர்காணல், ச.நாகராசு, சுந்தராம்பட்டி, திருமங்கலம்)..
முருகன் தெய்வானை 'தேவேந்திர குல வேளாளர் சமூக மடத்திற்கு மறு வீடு வருதல்' நிகழ்வு முடிந்த பின்,
அருகேயுள்ள காவல் தெய்வமான கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னர் பரிவட்டம் கட்டும் விழா தொடங்குகின்றது.
மதுரை மாடக்குளம் மரபுவழி ஊர்க்குடும்பனாருக்குத் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தினரால் முறைப்படி முதல் மரியாதையோடு 'பரிவட்டம்' கட்டப் படுகிறது.
பின்னர் மாடக்குளம் ஊர்க்குடும்பனார் திருப்பரங்குன்றம் விளாச்சேரி,பழங்காநத்தம்,அனுப்பானடி, மாடக்குளம், அவனியாபுரம் ஆகிய ஐந்து பள்ளர் ஊர்களைச் சேர்ந்த ஊர்க் குடும்பனார்களுக்குப் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெறுகிறது.
தற்போது மதுரை மாடக்குளம் ஊர்க்குடும்பனாராகத் தொழிலதிபர் வி.கே.துரை.உதயகுமார் என்பவரும், திருப்பரங்குன்றம் ஊர்க்குடும்பனாராக தவமணி, ஆதிமூலம், தனபால் ஆகியோர் ஆண்டிற்கு ஒருவர் என்ற சுழற்சி முறையிலும், விளாச்சேரி ஊர்க்குடும்பனாராகப் பெரிய குடும்பனார் தவமணி என்பாரும், பழங்காநத்தம் ஊர்க்குடும்பனாராக முத்து என்பாரும், அனுப்பானடி ஊர்க்குடும்பனாராக அக்கினி வீரன் என்பாரும், அவனியாபுரம் ஊர்க்குடும்பனாராக பாலசுப்பிரமணியன் என்பாரும் பதவி வகிக்கின்றனர். இவ்வூர்க் குடும்பனார் பதவி என்பது வாரிசுரிமைப்படி வழங்கப்படுகிறது. இம்முறையானது பாண்டிய மரபினர்கள் பள்ளர்களே என்பதை மெய்ப்பிக்கின்றது..
பள்ளர் குலத்தாரின் 'பரிவட்டம்' மரபுரிமை முறையானது, பாண்டியர் மரபு வழி அரசுரிமை கொண்டாடும் முடிசூட்டும் விழாவின் தொன்று தொட்டு தொக்கி நிற்கும் நிகழ்வென்பது இங்ஙனம் உறுதி செய்யப்படுகின்றது.
பாண்டியர்களால் கட்டப்பட்ட திருப்பரங்குனறம் கோயிலுக்கும் பள்ளர் குல மக்களுக்குமான உறவுகள்,
இவர்களே பாண்டியர் மரபினர் என்பதை உறுதி செய்கின்றன!
(முக நூலிருந்து)
Comments
Post a Comment