பிஜேபியை ஆதரிக்காதீர்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ...
பிஜேபியை ஆதரிக்காதீர்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு ...
நாங்கள் கடந்த அறுபது வருடங்களாக இந்த திராவிட கட்சிகளை ஆதரித்தோம் அதனால் என்ன பயன் ? எல்லோரும் சான்றிதழ்களில் பள்ளன் என்று இருப்பதை பள்ளர் என்று மாற்றுங்கள் என்று கோரினோம் , எங்களது ஆறு பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரர் என்று ஒற்றை சொல்லாக மாற்றுங்கள் என்று கோரிக்கை விடுத்தோம் இரண்டையும் இதுவரை இந்த திராவிட கட்சிகள் காதில் வாங்கிகொள்ளவில்லை , இந்த பெயர் மாற்றத்திற்கு பணமோ ,அல்லது அடுத்த சாதி மக்களின் எதிர்ப்போ எதுவும் கிடையாது ஆனால் அதைக்கூட செய்ய இந்த திராவிட கட்சிகளுக்கு மனமில்லை ( ஆனால் பள்ளிகளை வன்னியர் என்று மாற்றினார் ,கள்ளர் ,மறவர் ,சேர்வைகளை தேவர் என்று மாற்றினார்கள் ) , இதாவது பரவயில்லை பட்டியலினத்தில் எழுபது சாதிகள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களை ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கவேண்டும் என்று சட்டம் போட்டார்கள், ஆதிதிராவிடர்கள் என்பது பறையர் மக்களுக்கான பெயர் அதை எங்களின் மீது திணித்தார்கள் . பெயர் மாற்றத்தினால் என்ன ஆகப்போகிறது என்று நீங்கள் நினைக்கலாம் , ஒரு மரியாதைதான் சகோ உங்களை இஸ்லாமியர்கள் என்று அழைத்தால் அது மரியாதை ,துலுக்கன் என்று அழைத்தால் அது மரியாதை இல்லை அல்லவா ..அதேதான் சகோ எங்கள் பெயர் மாற்ற கோரிக்கையில் உள்ள நியாயம் .
இந்த திராவிட கம்முனிஸ்ட் கட்சிகள் இன்னும் எங்களுக்கு இழைத்த துரோகங்களை பட்டியடலாம் . ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் அனைத்து மாநிலங்களிலும் தாக்குதல் நடைபெறுகிறது ,அந்த தாக்குதல் ஆதிக்க சாதியினரிடமிருந்துதான் இருக்கும் ,ஆனால் தமிழகத்தில்தான் அரச பயங்கரவாதத்தால் மட்டுமே அதிக உயிரிழப்புகள் இந்த தேவேந்திர குலமக்கள் சந்தித்துள்ளோம் ( தாமிரபரணி ,பரமக்குடி நேற்று தொண்டி கோவிந்தன் ) , இந்த திராவிட கவ்வோதிகள் சிறுபான்மையினருக்கு பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டு சாதி சண்டைகளை அகற்ற தவறிவிட்டார்கள் அதுமட்டுமில்லாமல் சாதி சண்டைகளை இவர்களே ஊக்குவித்துவிட்டார்கள் இடை சாதிகளுக்கு மட்டும் அரசின் அனைத்து பயன்களும் கிடைக்க உதவுகிறார்கள் .
இந்த சமயத்தில் எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிற ஒரு தேசிய கட்சியை நாங்கள் ஆதரிப்பதில் தவறு இல்லை என்றே நாங்கள் தீர்மானித்துள்ளோம் .அவர்களால் அனைத்து சாதிகளும் ஒற்றுமையுடன் இந்த சமூகத்தில் வாழ தீர்வு தருவார்கள் என்று நம்புகிறோம் ( மத சண்டைகள் அவர்களால் மட்டுமல்ல , அமித் ஸாவே இங்கே ஆட்சி செய்தாலும் மதச்சண்டை ஒரு போதும் வராது ,இங்கே இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரு தாய் பிள்ளைக்காக இருக்கின்றோம் ஆனால் சாதிகளுக்கும் மிக பெரிய பிளவு உண்டு அதை திராவிட கட்சிகள் ஒன்றிணைப்பார்கள் என்று அறுபது வருடம் அவர்கள் பின்னால் சென்றோம் ஏமாற்றமே கிடைத்தது . ஒரு வாய்ப்பு பிஜேபிக்கு கொடுத்துதான் பார்ப்போமே சகோ . அறுபது ஆண்டுகால பொறுத்த நமக்கு ஐந்து வருடங்கள் பொறுமையாக பொறுப்பாக நடப்போம் . தமிழகத்தில் சாதி சண்டைகள் நிகழாமல் ஒற்றுமை வளரும் என்று நம்பிக்கை கொள்வோம் .
நன்றி .
Comments
Post a Comment